உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குரூப் 1 தேர்வில் 2,284 பேர் ஆப்சென்ட்

குரூப் 1 தேர்வில் 2,284 பேர் ஆப்சென்ட்

ஈரோடு: தமிழக அரசின் கீழ் துணை கலெக்டர், டி.எஸ்.டி., - வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்-குனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் போன்ற பதவி-களில், 90 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல் நிலை எழுத்து தேர்வு நேற்று மாநில அளவில் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 27 மையங்களில் தேர்வு நடந்தது. 7,251 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 4,967 பேர் பங்கேற்றனர். ௨,௨௮௪ பேர் புறக்கணித்து விட்டனர். முறைகேடுகளை தடுக்க, ஈரோடு ஆர்.டி.ஓ., சதீஸ்குமார் தலைமையில், 5 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டிருந்தது. ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடந்த தேர்வை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை