உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திறனறி தேர்வில் 353 பேர் ஆப்சென்ட்

திறனறி தேர்வில் 353 பேர் ஆப்சென்ட்

ஈரோடு, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவ--மாணவியருக்கு, ஆண்டுதோறும் முதல்வரின் திறனறி தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுவோருக்கு, ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம் இளநிலை பட்டப்படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான திறனறித் தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட, 17 மையங்களில் தேர்வு நடந்தது. 3,678 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 353 பேர் பங்கேற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ