உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாக்கு சாகுபடி பயிற்சியில் 400 விவசாயிகள் பங்கேற்பு

பாக்கு சாகுபடி பயிற்சியில் 400 விவசாயிகள் பங்கேற்பு

கோபி, ஆபாக்கு சாகுபடி, அறுவடை பின்சார் தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த, மாவட்ட அளவிலான பயிற்சி, கோபி வேளாண் அறிவியல் நிலையத்தில் நேற்று நடந்தது.முதன்மை விஞ்ஞானி அழகேசன் தலைமை வகித்தார். விஞ்ஞானி பிரேமலதா வரவேற்றார். மத்திய கிழங்கு வகை பயிர்களின், ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் பிஜூ சிறப்பு விருந்திராக கலந்து கொண்டு பேசினார். முதன்மை விஞ்ஞானி மணிகண்டன், முதுநிலை விஞ்ஞானி ஜகநாதன் பேசினர்.முதுநிலை விஞ்ஞானி சுமிதா பாக்கு ரகங்கள் குறித்தும், முதுநிலை விஞ்ஞானி நாகராஜா பாக்கு சாகுபடி தொழில்நுட்பம் குறித்தும் பேசினர்.ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த, விவசாயிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் என, 400 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ