உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தரமற்ற தின்பண்டம் விற்ற 5 கடைகளுக்கு அபராதம்

தரமற்ற தின்பண்டம் விற்ற 5 கடைகளுக்கு அபராதம்

பெருந்துறை:பெருந்துறை உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் குழுவினர், பெருந்துறையில் பானிபூரி, பேக்கரி, டீக்கடை மற்றும் சாலையோர தள்ளு வண்டி கடைகளில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.பானிபூரியில் செயற்கை நிறமிகள் சேர்க்காமல் தயாரித்து விற்க கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினர். சாலையோர தள்ளு வண்டி கடையில் செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட, 2 கிலோ காளான் சில்லியை பறிமுதல் செய்தனர். பேக்கரி, டீக்கடைகளில் செய்தித்தாள் மீது வைக்கப்பட்டிருந்த வடை, போண்டா மற்றும் பஜ்ஜியை கைப்பற்றினர்.லேபிள் இல்லாத, செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட நொறுக்கு தின்பண்டம் (ஸ்நாக்ஸ்), 3 கிலோ பறிமுதல் செய்து அழித்தனர். இது தொடர்பாக ஐந்து கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.பெருந்துறை வட்டாரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்ற ஐந்து கடைகளின் உரிமத்தை ரத்து செய்து, கடைகளுக்கு சீல் வைத்தனர். அதேசமயம் ஒவ்வொரு கடைக்கும் தலா, 25,000 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ