உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டிரைவரை தாக்கிய கும்பல் மீது வழக்கு

டிரைவரை தாக்கிய கும்பல் மீது வழக்கு

ஈரோடு:நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், ஒட்டமெத்தையை சேர்ந்தவர் ராமன், 27; திண்டல் முருகன் ஸ்டீல் கம்பெனி டிரைவர். கடையில் ராமன் இருந்தபோது, சந்திரபிரசாத், தமிழ் செல்வன், வெங்கடேஷ், அரவிந்த் என நான்கு பேர் குடிபோதையில், மழையில் நனைந்த ஈரத்துடன் கடைக்குள் சென்றனர். கடை ஈரமாகி விடும். வெளியே செல்லுங்கள் என கூறியுள்ளார். வெளியே சென்ற நிலையில் கும்பலுக்கும், ராமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராமனை தகாத வார்த்தை பேசி, கல்லால் தலையில் தாக்கி, பீர் பாட்டிலால் கன்னத்தில் அடித்துள்ளனர். அங்கிருந்த ஆடிட்டர் சந்திரசேகரையும் கைகளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்த புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ