உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில் அருகில் இறந்து கிடந்த போதை அடிமை

கோவில் அருகில் இறந்து கிடந்த போதை அடிமை

அந்தியூர், அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவில் முன்புறம் விநாயகர் கோவில் அருகே, ஒரு ஆண் சடலம் கிடந்தது. அந்தியூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் அந்தியூர், சங்கராபாளையத்தை சேர்ந்த மணி, 45, என தெரிய வந்தது. குடிப்பழக்கத்துக்கு மணி அடிமையானதால், மனைவி மணிமேகலை கோபித்துக் கொண்டு ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த நிலையில், குடிப்பழக்கத்தால் உடல் நலம் பாதித்து இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி