உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது

ஈரோடு, ஈரோடு, கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகர் 4வது வீதியில் பிஸ்மில்லா மளிகை கடையில் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் மாணிக் சந்த், விமல் பான்மசாலா உள்பட பல்வேறு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக, 87 கிலோ வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 29 ஆயிரத்து, 232 ரூபாய். மேலும் ஜூபிடர் ஸ்கூட்டர், பஜாஜ் மகிமா ஸ்கூட்டர், சாம்சங் மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளரான சாகுல் அமீது, 34, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை