| ADDED : ஜூன் 11, 2024 06:06 AM
ஈரோடு : பள்ளியிலேயே ஆதார் பதிவு, வங்கி கணக்கு தொடங்கும் சிறப்பு முகாமை, ஈரோட்டில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார். ப.செ.பார்க் அரசு மேல்நிலை பள்ளியில் முகாமை துவக்கி வைத்தார். 19 கருவிகளை கொண்டு புதிய ஆதார் பதிவு, புதுப்பித்தல் பணிகளை, ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ள ஏதுவாக தரவு உள்ளீட்டாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள, 14 யூனியன்களிலும் முகாம் நேற்று துவங்கியது. அரசு, அரசு நிதியுதவி பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு புதிய பதிவு, ஆதார் எண் புதுப்பித்தல் பணியை மேற்கொள்ளலாம்.தனியார் மற்றும் சுய நிதி பள்ளிகளில் பயிலும் 6, 7 வயது குழந்தைகளுக்கும், 16,17 வயது குழந்தைகளுக்கும் இலவசமாக இச்சேவை வழங்கப்படுகிறது. 8 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு புதுப்பித்தல் மேற்கொள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி சேவையை பெறலாம். அனைத்து அரசு, அரசு நிதியுதவி, தனியார் பள்ளி மாணவ,மாணவிகள் அப்பள்ளி வளாகத்திலேயே வங்கி கணக்கு தொடங்கும் பணியும் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம், தி.மு.க., மாநகர செயலாளர் சுப்பிரமணியம், முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, தலைமை ஆசிரியை சுகந்தி பங்கேற்றனர்.