உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

கோபியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ஈரோடு : தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து, ஈரோடு அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில், கோபியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ., செங்கோட்-டையன் தலைமை வகித்து பேசியதாவது: மின்சார கட்டணம், வீட்டு வரி தமிழகத்தில் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒ-ழுங்கு சரியில்லை, கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை பெருகியுள்-ளது. கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது.இதையெல்லாம் தடுக்கும் சக்தி தி.மு.க.,வுக்கு இல்லை. 2026 சட்டசபை தேர்தல் என்பது, தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் தேர்தலாக அமையும். அவினாசி-அத்திக்கடவு திட்டப்பணி, அ.தி.மு.க., ஆட்சியில், 95 சதவீதம் முடித்தோம். எஞ்சிய, 5 சத-வீதி பணியை முடிக்காமல், தி.மு.க., அரசு துாங்கி கொண்டுள்-ளது. இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரம-ணியம், கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., ரமணீதரன், முன்னாள் எம்.பி., சத்தியபாமா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை