உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓட்டு கேட்டு சென்றபோது எம்.எல்.ஏ.,விடம் முறையீடு

ஓட்டு கேட்டு சென்றபோது எம்.எல்.ஏ.,விடம் முறையீடு

டி.என்.பாளையம்: திருப்பூர் லோக்சபா தொகுதி இ.கம்யூ., வேட்பாளரை ஆதரித்து, அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். புஞ்சை துறையம்பாளையம் பஞ்., அண்ணா நகர் பகுதியில் ஓட்டு சேகரிக்க சென்றவரை, 20க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் சூழ்ந்தனர். சில தினங்களாக குடிநீர் வரவில்லை. தங்கள் பகுதியில் வடிகால் வசதி இல்லை என முறையிட்டனர். பஞ்., நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை என்று கூறி முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக எம். எல்.ஏ., உறுதி கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ