உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீயில் சாம்பலான கடையில் மீண்டும் புகை

தீயில் சாம்பலான கடையில் மீண்டும் புகை

ஈரோடு: தீ விபத்து ஏற்பட்ட கடையில், மீண்டும் புகை வந்ததால் பரப-ரப்பு ஏற்பட்டது.ஈரோட்டில் சத்தி சாலையில், ராவணன் என்பவருக்கு சொந்த-மான, பரணி பைப்ஸ் மற்றும் டியூப்ஸ் கடை, குடோன் உள்ளது. கடந்த, 11ம் தேதி காலை, 10:40 மணிக்கு மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. மறுநாள் அதிகாலை, 4:30 மணிக்கு முழு-மையாக தீயை அணைத்த பின், தீயணைப்பு வீரர்கள் அங்கி-ருந்து வெளியேறினர். சேத மதிப்பு எட்டு கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை, 10:55 மணிய-ளவில் தீப்பிடித்து எரிந்த இடத்தில் இருந்து மீண்டும் புகை அதிகம் வருவதாக ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்-தது. இதனால் அருகில் இருந்த கடைக்காரர்கள், குடியிருப்புவா-சிகள் திகைப்படைந்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு துறை-யினர், புகை வெளியேறும் இடங்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்-தனர். அரை மணி நேரம் பணியில் ஈடுபட்டனர். புகை வெளியே-றுவது நின்ற பிறகு அங்கிருந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை