ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயன்பாளையம் அணைக்கட்டில், அத்திக்கடவு - அவிநாசி திட்ட துவக்க விழாவில் பங்கேற்ற, பா.ஜ., மாநில விவசாய அணி தலைவர் நாகராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 65 ஆண்டு கோரிக்கையாக, அத்திடக்கடவு - அவிநாசி திட்டம் இருந்தது. இத்திட்டம் முழுக்க, முழுக்க பா.ஜ.,வால் தற்போது திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆக., 3ல் தீரன் சின்னமலை நினைவு நாளில், இத்திட்டத்தின், 3ம் நீரேற்று நிலையத்தை பார்வையிட்டு, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி கொடுத்தார். அப்போது, இத்திட்டத்தை வரும், 20க்குள் துவங்காவிட்டால் வரும், 20 முதல் எனது தலைமையில் தொடர் உண்ணாவிரதம் நடத்தப்படுமென அறிவித்தார். அதன் பின், வேக, வேகமாக இத்திட்டப்பணிகளை நிறைவு செய்து, துவக்கி வைத்துள்ளனர். அப்படி அறிவிப்பு வெளியிடாமல் இருந்திருந்தால், இன்னும் பல மாதங்களானாலும், திறந்திருக்க மாட்டார்கள்.இவ்வாறு கூறினார். அப்போது மொடக்குறிச்சி பா.ஜ., எம்.எல்.ஏ., சரஸ்வதி உடனிருந்தார்.