உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீர் நிலை பாதுகாப்பில் பட்டாலியன் போலீசார்

நீர் நிலை பாதுகாப்பில் பட்டாலியன் போலீசார்

ஈரோடு, அறச்சலூர் அருகே ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு நாள் நாளை அரசு நிகழ்ச்சியாக நடக்கிறது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி எஸ்.பி., ஜவகர் தலைமையில், 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது தவிர கோவை மாவட்ட பட்டாலியன் போலீசார், 210 பேர் இன்று வருகை தர உள்ளனர். இவர்கள் தீரன் சின்னமலை நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்கும், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை