உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆம்புலன்ஸ் பணிக்கு நாளை முகாம்

ஆம்புலன்ஸ் பணிக்கு நாளை முகாம்

ஈரோடு, ஈரோடு, அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை நடக்க உள்ளது. டிரைவர் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 24 முதல், 35 வயதுக்குள், ஆண், பெண்கள் பங்கேற்கலாம். உயரம், 162.5 செ.மீ.,க்கு குறையக்கூடாது. மாத ஊதியம், 15,820 ரூபாய். மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., - ஏ.என்.ஏம்., - டி.எம்.எல்.டி., - லைப் சயின்ஸ், பி.எஸ்.சி., விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி என ஏதாவது படித்திருக்க வேண்டும். 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாத ஊதியம், 16,020 ரூபாய். கூடுதல் விபரத்துக்கு, 044-28888060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை