உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவை-லோகமான்ய திலக் ரயில் 3 மணி நேரம் தாமதத்தால் அவதி

கோவை-லோகமான்ய திலக் ரயில் 3 மணி நேரம் தாமதத்தால் அவதி

சேலம்: கோவை-லோகமான்ய திலக் ரயில், நேற்று மூன்று மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.கோவையிலிருந்து தினமும் காலை, 8:50 மணிக்கு கிளம்பும், கோவை-லோகமான்ய திலக் ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஒசூர் வழியே மும்பை செல்கிறது. நேற்று காலை, 8:50 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த ரயில், மூன்று மணி நேரம், 15 நிமிடம் தாமதமாக மதியம், 12:05 மணிக்கு கிளம்பியது. சேலம் ஜங்ஷனுக்கு காலை, 11:20 மணிக்கு வர வேண்டிய ரயில், 2:34 மணிக்கு வந்தது. மூன்று மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக இயக்கப்பட்டதால், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் முன்பதிவு செய்து காத்திருந்த பயணிகள் அவ-திக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை