உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கரையோர பகுதியில் கலெக்டர் ஆய்வு

கரையோர பகுதியில் கலெக்டர் ஆய்வு

பவானி: ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எஸ்.பி., ஜவஹர் ஆகியோர், பவானி பழைய பாலம், புதிய பாலம், கூடுதுறை பாலம் கந்தன் பட்டறை ஆகிய காவிரி கரையோர பகுதிகளில் நேற்று பார்வையிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தனர். பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்-பாடு செய்துள்ள, பவானி பசுவேஸ்வரர் வீதியில் உள்ள நகராட்சி பள்ளி முகாமுக்கு சென்று, மின்சாரம், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி குறித்து ஆலோசனை நடத்தியும், விரைவாக பணிகளை செய்து முடித்திடவும் அறிவுறுத்தினர். இதேபோல், அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை காவிரி கரை-யோர பகுதிகளுக்கு சென்ற கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை