உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துணியுடன் தையல் போட்ட அவலம் தனியார் மருத்துவமனை மீது புகார்

துணியுடன் தையல் போட்ட அவலம் தனியார் மருத்துவமனை மீது புகார்

ஈரோடு, : ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பூபதி, 38; கார் டிரைவர். கடந்த, 1ல் பைக்கில் சென்றபோது விழுந்து நெற்றியில் காயம் அடைந்தார். இடையன்காட்டுவலசில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நெற்றியில் தையல் போட்டு, 6,000 ரூபாய் வரை கட்டணம் பெற்றுள்ளனர். அடுத்த இரு நாட்களில் மேல் சிகிச்சைக்கு கூடுதல் செலவாகும் என்றதால், பூபதி வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் கடும் தலைவலி நீடித்தது. ஈரோடு அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சைக்கு சென்றார். மருத்துவ பரிசோதனையில் காயம்பட்ட இடத்தில் துணியுடன் சேர்த்து தையல் போட்டது தெரிய வந்தது.இதுபற்றி கலெக்டர் அலுவலகத்தில் புகாரளித்த பூபதியை, மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அம்பிகாவிடம் அனுப்பி வைத்தனர். அவரது பரிந்துரைப்படி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நெற்றி காயத்தில் இருந்த துணியை அகற்றினர்.இதுபற்றி பூபதி கூறியதாவது: துணியுடன் தையல் போட்டு, அலட்சியமாக நடந்து கொண்ட மருத்துவமனை மீதும், டாக்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என இணை இயக்குனரிடமும் புகார் செய்துள்ளேன். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி