| ADDED : ஆக 23, 2024 01:53 AM
ஈரோடு, ஆக. 23-ஈரோடு டவுன் டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய ஜெய்சிங், கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., முத்துக்குமரன், ஈரோடு டவுனுக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். * கோபி சப்-டிவிஷன் டி.எஸ்.பி., தங்கவேல், ஈரோடு மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் கூடம் (டி.சி.ஆர்.பி.,) பிரிவு டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சீனிவாசன், கோபிக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.