உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இந்து சாம்ராஜ்ய தின விழா

இந்து சாம்ராஜ்ய தின விழா

ஈரோடு;இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில், இந்து சாம்ராஜ்ய தின விழா, வீரப்பன்சத்திரம், பெரியவலசு, சூரம்பட்டி, திண்டல், ரங்கம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நேற்று கொடியேற்றத்துடன் நடந்தது. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.சத்தியில் சலசலப்புஹிந்து சாம்ராஜ்ய தினம் கொண்டாடுவதற்காக, சத்தி எஸ்.ஆர்.டி., கார்னர் பகுதியில், ஹிந்து முன்னணியினர் கொடிக்கம்பம் நட, நேற்று முன்தினம் இரவு குழி தோண்டினர். தி.மு.க., கொடிக்கம்பம் முன் தோண்டியதாக அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தி போலீசார் பேச்சுவார்த்தையால் இரு தரப்பினரும் சமாதானமாகி கலைந்து சென்றனர். அதேசமயம் நேற்று அந்த இடத்தில் கொடிக்கம்பம் நட்டு, ஹிந்து முன்னணியினர் இந்து சாம்ராஜ்ய தினம் கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை