உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடுமுடி அருகே சாலைப்பணி ஆய்வு

கொடுமுடி அருகே சாலைப்பணி ஆய்வு

கொடுமுடி, கொடுமுடி அருகே சாலைபுதுார்-வெங்கமேடு வரை, 20 கோடி ரூபாய் மதிப்பில், இரு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சரவணன், ஈரோடு கோட்ட பொறியாளர் ரமேஷ்கண்ணா ஆகியோர், பணிகளை நேற்று பார்வையிட்டனர். பணிகளின் தற்போதைய நிலை, சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். கொடுமுடி இளநிலை பொறியாளர், ஒப்பந்ததாரர்களிடம், பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை