உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காமராஜ் கல்வி நிறுவனத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா

காமராஜ் கல்வி நிறுவனத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா

நம்பியூர்;நம்பியூர் காமராஜ் கல்வி நிறுவனங்களின் சார்பில், முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.பள்ளி செயலர் ஜவகர் தலைமை தாங்கினார். பள்ளி இணை செயலர் சுமதி ஜவகர் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கணேஷ்குமார் வரவேற்றார். மாணவர்களுடைய பேச்சு, கலை நிகழ்ச்சி, மாறுவேடப் போட்டி, பாட்டு மற்றும் பாரம்பரிய சிறுதானிய உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தலைமை ஆசிரியர் குழந்தைவேல் கலந்து கொண்டு, சான்றிதழ் மற்றும் மரக்கன்று வழங்கினார். பள்ளி முதல்வர் அருள்மொழி நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை