உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரி தடுப்பணை வெறிச்

கொடிவேரி தடுப்பணை வெறிச்

கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணைக்கு, விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பள்ளிகள் திறப்பு எதிரொலியால், மிக குறைவான பயணிகளே கொடிவேரிக்கு நேற்று வந்தனர். இதனால் தடுப்பணை வளாக பகுதி, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.மேலும், சில நாட்களாக பவானி ஆறு வழித்தடத்தில் பெய்யும் மழையால், ஆகாயத்தாமரை செடிகள் அனைத்தும், கொடிவேரி தடுப்பணை வளாகத்தில் தேங்கியுள்ளது. இன்னும் சில இடங்களில் ஆகாயத்தாமரை செடிகள், தடுப்பணைக்கு கீழே குளிக்கும் பயணிகள் மீது விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியுறுகின்றனர். நீர்வள ஆதாரத்துறையினர் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும். கோடை விடுமுறையால் இரு மாதங்களாக வாரவிடுமுறை நாளில், பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தனர். இன்று பள்ளிகள் திறப்பால், குறைந்த சுற்றுலா பயணிகளே நேற்று வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை