உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொலையில் கைதான 2 பேர் மீது குண்டாஸ்

கொலையில் கைதான 2 பேர் மீது குண்டாஸ்

ஈரோடு ஈரோட்டில் வாலிபர் கொலையில் கைதான இருவர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.ஈரோடு, ஈ.வி.என்.சாலை, ஸ்டோனி ப்ரிட்ஜ் பகுதியில் கடந்த மார்ச், 17ம் தேதி அதிகாலை, 38 வயது மதிக்கதக்க நபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். கொலையான நபரை இதுவரை அடையாளம் காண முடியவில்லை. அதேசமயம் அவரை கல்லால் தாக்கி நான்கு பேர் கொன்றதை கண்டுடிபிடித்தனர்.இது தொடர்பாக ஈரோடு, மணல் மேடு, ஆட்டோ டிரைவர் விஜய், 23; ஈரோடு, ஓடைபள்ளம், பெரியார் நகர் மீன் வியாபாரி அருணாசலம், 28, ரஞ்சித், ஏழுமலை என நான்கு பேரை கைது செய்து, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.இதில் விஜய், அருணாசலம் மீது போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்கு இருப்பது தெரியவந்தது. இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., ஜவகர் கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இதை ஏற்கவே, இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில், இருவரும் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை