உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., நீர்மோர் பந்தலுக்கு மாநகராட்சி  குடிநீர்

தி.மு.க., நீர்மோர் பந்தலுக்கு மாநகராட்சி  குடிநீர்

ஈரோடு: ஈரோட்டில் தி.மு.க.,வின் நீர்மோர் பந்தலுக்கு, மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தி.மு.க., தலைமை அறிவுறுத்தலின்படி, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மாநகராட்சி பகுதியில் நீர்மோர் பந்தல்கள் நேற்று அமைக்கப்பட்டன. இதன்படி, பெரிய சேமூர் கழகம் சார்பில், வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நீர்மோர் பந்தல் திறந்தனர். இந்த நீர் மோர் பந்தலுக்கு, இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட மாநகராட்சி டிராக்டர் டேங்கர் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டது.மாநகராட்சி சார்பில் தனியார் அமைப்புகளுக்கு லாரிகளில் கட்டண அடிப்படையில் குடிநீர் சப்ளை செய்யும் முறை, பல ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டு விட்டது. குழாயில் குடிநீர் கிடைக்காத மக்களுக்கு மட்டுமே, டிராக்டர் டேங்கர் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆளுங்கட்சியான தி.மு.க., அமைத்த நீர்மோர் பந்தலுக்கு, மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுஉள்ளது. போதிய குடிநீர் கிடைக்காமல் மாநகரில் பல்வேறு இடங்களில், மக்கள் அவதியுறும் நிலையில், நீர்மோர் பந்தலுக்கு, விதிமுறைகளுக்கு மாறாக குடிநீர் வினியோகம் செய்தது, பிற கட்சியினர் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ