உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாயமான டெய்லர் சடலமாக மீட்பு

மாயமான டெய்லர் சடலமாக மீட்பு

ஈரோடு, ஈரோடு, கைக்கோளன் தோட்டம், முத்துவேலப்ப வீதியை சேர்ந்தவர் ராஜாமணி, 49; ஈரோடு தாலுகா அலுவலக முன்புறம், சுவாதி டெய்லர் என்ற கடையை நடத்தி வந்தார். இவர் மனைவி கோமதி, 39; தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி, 15 நாட்களுக்கு பின் மீண்டும் வீடு திரும்பவது ராஜாமணி வாடிக்கை. கடந்த ஜன., 27ம் தேதி கடையில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஈரோடு திருமகன் ஈவெரா சாலையில், பழைய கோர்ட் கட்டடத்தின் உட்புறம், ராஜாமணி சடலம் துாக்கிட்ட நிலையில் அழுகிய நிலையில் தொங்கியது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை