உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமியிடம் சீண்டல் நீலகிரி நபருக்கு சிறை

சிறுமியிடம் சீண்டல் நீலகிரி நபருக்கு சிறை

ஈரோடு:நீலகிரி மாவட்டம், கூடலுாரை சேர்ந்தவர் அசோகன், 49; ஈரோடு நாராயணவலசில் கலர் மீன்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் வசித்த இவர், ஈரோட்டை சேர்ந்த, 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து போக்சோ வழக்கில் அசோகனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்