உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நள்ளிரவில் வீடுகளின் கதவை தட்டும் சைக்கோ ஆசாமியால் மக்கள் அச்சம்

நள்ளிரவில் வீடுகளின் கதவை தட்டும் சைக்கோ ஆசாமியால் மக்கள் அச்சம்

ஈரோடு: சோலாரில் நள்ளிரவில் வீடுகளின் கதவை தட்டும் சைக்கோ ஆசா-மியால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஈரோடு அருகே சோலார் ஈ.பி.நகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர் நடமாட்டம் இருப்பதை மக்கள் உணர்ந்தனர். இதனால் பல இடங்களில் 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தினர். இதில் கடந்த, 9ம் தேதி ஒரு ஆசாமி, கையில் கத்தியுடன் வீட்டு கதவை நள்ளிரவில் தட்டுவது, காலிங் பெல்லை அழுத்தும் செயலில் ஈடு-பட்டது தெரிய வந்தது. இதுபற்றி மொடக்குறிச்சி போலீசாருக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து மக்கள் கூறியதாவது: நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் நடமாடும் நபர் குறித்து போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு-களின் கதவை தட்டுவது, காலிங் பெல் அடிப்பது இன்றளவும் அவ்வப்போது தொடர்கிறது. இதனால் இரவில் வீட்டுக்கு வெளியே கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடு, வீடாக கதவை தட்டுவது, காலிங் பெல்லை அடித்து சிறிது நேரம் நிற்-பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் திருடனாக இருக்க முடி-யாது. இது மேலும் அச்சத்தை அதிகப்படுத்துகிறது. அந்த நபர் சைக்கோவாக இருக்க கூடும் என நம்புகிறோம். நள்ளிரவில் அவரால் கண்களில் படும் நபர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. இவ்விஷயத்தில் போலீசார் துரிதமாக செயல்-பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Godyes
ஜூலை 26, 2024 19:07

இந்த மாதிரி திமிர் பிடித்து நடு இரவில் அலையறவன்களை பொதுமக்கள் கையில் ஆயுதங்கள் துப்பாக்கிகளுடன் சேர்ந்து அவனை பிடித்து தெருக்கம் பத்தில் கட்டி வைத்து செருப்பால் சாத்தலாம்.


சமீபத்திய செய்தி