மேலும் செய்திகள்
ஆவணங்களை ஒப்படைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு
20-Aug-2024
மனு... மனை... மாறாத நம்பிக்கை!
06-Aug-2024
ஈரோடு: அந்தியூர், சத்தி சாலை, அண்ணா சாலையை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்க வந்தனர். குறைதீர் கூட்டம் முடிந்து, காரில் ஏற கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியே வந்தார். அவரை பார்த்த மக்கள், மனு வழங்கி முறையிட வந்தனர். ஆனால், மனுவை பெறாமல், காரில் ஏறி கலெக்டர் சென்றுவிட்டார். பின் வளாகத்தில் கதறி அழுதபடி மக்கள் கூறியதாவது: அந்தியூர் தாலுகா, 'அ' கிராமத்தில், 1990ல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரால், சவர தொழிலாளர் மற்றும் சலவை தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க ஆய்வு செய்து, நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொண்டார். அந்நில உரிமையாளர், நீதிமன்றத்தை அணுகிய நிலையில், 34 ஆண்டுகளுக்கு பின் அரசுக்கு சாதகமாக, 6 மாதத்துக்கு முன் தீர்ப்பு கிடைத்தது. எனவே எங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். கூலி வேலை செய்யும் எங்களுக்கு, வீடு கட்டுவது கனவாகவே உள்ளது. எங்களுக்குரிய இடத்தில் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர். சிறிது நேரம் காத்திருந்த பின், திரும்பி சென்றனர்.
20-Aug-2024
06-Aug-2024