உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ., தலைவரிடம் மேம்பாலம் கோரி மனு

பா.ஜ., தலைவரிடம் மேம்பாலம் கோரி மனு

பெருந்துறை, -பெருந்துறை பகுதி தேசிய நெடுஞ்சாலையில், பெத்தாம்பாளையம் ரோடு மற்றும் விஜயமங்கலம், வாய்ப்பாடி சந்திப்புகளில், விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க, மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். பெருந்துறை ஆர்.எஸ்.ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என்று கோரி, பெருந்துறைக்கு வந்த பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையிடம், பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் தலைவர் செந்தில்முருகன் கோரிக்கை மனு அளித்தார். இதுதொடர்பாக மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ