உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆவணங்களை ஒப்படைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு

ஆவணங்களை ஒப்படைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் எலவமலை, மூவேந்தர் நகர் பகுதி மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: நாங்கள் இலங்கையில் இருந்து ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தப்படி இந்தியா வந்து, எலவமலை பஞ்., சக்தி மூவேந்தர் நகரில் வசிக்கிறோம். எங்களுக்காக, 3 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்கான பத்திரம், ஆவணங்கள் ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ளது. இந்த ஆவணங்களை எங்களிடமே வழங்க முதல்வர் உத்தரவிட்டும் வழங்காமல் உள்ளனர். இதற்கிடையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சிலர் ஆக்கிரமித்து, முள் வேலி அமைத்து எங்களை தடுக்கின்றனர். இதுபற்றி வி.ஏ.ஓ.,விடம் மனு வழங்கியபோது, ஆதாரம் கேட்கின்றனர். ஆவணங்களை வழங்கி, ஆக்கிரமிப்பு செய்வோர் மீது நடவடிக்கை எடுத்து, முள் வேலைியை அகற்ற வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை