உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின்வாரிய ஓய்வூதியர் கண்டன ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஓய்வூதியர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு : தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர், ஈரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்-பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் குழந்-தைசாமி தலைமை வகித்தார். செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்-பாளராக சி.ஐ.டி.யு., மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில உதவி செயலாளர் ஜோதி-மணி பங்கேற்று பேசினார். ஜனவரி முதல் வழங்க வேண்டிய அகவிலைப்-படி உயர்வு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். உத்தரவாதம் அளிக்காத முத்-தரப்பு ஒப்பந்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். பொருளாளர் ராஜன், நிர்வாகி குப்புசாமி மற்றும் மின்வாரிய ஓய்வூதி-யர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை