உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இலவச வேட்டி, சேலைக்கான அரசாணை வெளியிட விசைத்தறியாளர்கள் விருப்பம்

இலவச வேட்டி, சேலைக்கான அரசாணை வெளியிட விசைத்தறியாளர்கள் விருப்பம்

ஈரோடு:தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என, விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:மூன்று மாதங்களாக நுால் விலை ஏற்ற, இறக்கமாகவும், மார்க்கெட்டில் இல்லாததாலும், நுால் கொள்முதல் விலையை விட, காட்டன் துணி, ரயான் துணி குறைந்த விலைக்கு விற்பனையாகின்றன.இதனால், பெரும்பாலான விசைத்தறியில் உற்பத்தி நிறுத்தப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இலவச வேட்டி, சேலை பணியை எதிர்பார்க்கும் விசைத்தறியாளர்கள் வேலை இன்றி நெருக்கடியில் உள்ளனர்.கடந்த, 10 ஆண்டுகளாக ஜூன் முதல் வாரமே இலவச வேட்டி, சேலை உற்பத்தி துவங்கி, தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும். தற்போது வரை எந்த நுாலால், வேட்டி, சேலை உற்பத்தி செய்வது, எந்த கலர் கொடுப்பது என்ற முடிவு எடுக்கவில்லை. இதற்கு, அரசாணை வெளியாகவில்லை என்கின்றனர்.எனவே, அரசு விரைவாக அரசாணை வெளியிட்டு, உற்பத்திக்கான முதற்கட்ட நுால் டெண்டர் பரிவர்த்தனையை துவங்கி, 1.68 கோடி வேட்டி, 1.73 கோடி சேலை உற்பத்தி பணிக்கான உத்தரவை வழங்க வேண்டும்.விசைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம், உடனடியாக பணியை துவங்கினால் தான், டிசம்பர் இறுதிக்குள் பணியை முடித்து, பொங்கலுக்குள் வேட்டி, சேலையை மக்களுக்கு வழங்க தயார்படுத்த முடியும்.பல லட்சம் நெசவாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவர். எனவே, உரிய ஆணையை முதல்வர் வெளியிட்டு, பணியை விரைவுபடுத்த வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை