உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மயானத்தை ஆக்கிரமிக்க முயற்சி ஆர்.டி.ஓ., ஆபீசில் போராட்டம்

மயானத்தை ஆக்கிரமிக்க முயற்சி ஆர்.டி.ஓ., ஆபீசில் போராட்டம்

கோபி: கோபி, அக்கரை கொடிவேரி அருகே காமராஜபுரத்தை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள், கோபி ஆர்.டி.ஓ., ஆபீசுக்கு நேற்று காலை மனு கொடுக்க வந்தனர். அதிகாரிகள் மனுவை பெற்ற கொண்ட நிலையில், மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி, அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுஹித்து அவர்கள் கூறியதாவது: காமராஜபுரத்தில், 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கிறோம். எங்கள் பகுதி மக்கள், தடப்பள்ளி வாய்க்காலின் தென்பகுதியில் உள்ள நிலத்தை, நுாறாண்டுகளுக்கும் மேலாக மயானமாக பயன்படுத்தி வருகிறோம். அப்பகுதியில் விவசாயம் செய்யும் தனி நபர், மயா-னத்தில் அத்துமீறி நுழைந்து, இயந்திரம் மூலம் சமாதிகளை தோண்டி அப்புறப்படுத்தி உள்ளார். மயான நிலத்தை சேதப்ப-டுத்தி, ஆக்கிரமிக்கும் தனி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர். வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்ப-தாக உறுதியளிக்கவே காத்திருப்பு போராட்டத்தை மாலை, 4:00 மணிக்கு கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை