உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஈரோடு, ஆக. 22-ஈரோட்டில், போக்குவரத்துக்கு இடையூறாக முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் மனிஷ் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, மாநகராட்சி மூன்றாம் மண்டலத்திற்கு உட்பட்ட, பெருந்துறை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது.மண்டல உதவி செயற்பொறியாளர் ஆனந்த் தலைமையில், இளநிலை பொறியாளர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, கோபாலகிருஷ்ணன் ஆகி யோர் முன்னிலையில், சாலையை ஆக்கிரமித்து கடைகளுக்கு முன்புறம் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், நடைபாதை ஆக்கிரமிப்புகளை துாய்மை பணியாளர்கள் அகற்றினர். இதேபோல், சாலையோரமாக சாக்கடை கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 30க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களின் படிக்கட்டுகள், கட்டுமானங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை