உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்தி அரசு கலை கல்லுாரியில் நாளை முதல் நேரடி சேர்க்கை

சத்தி அரசு கலை கல்லுாரியில் நாளை முதல் நேரடி சேர்க்கை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், நாளை முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதுகுறித்து கல்-லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி-யிருப்பதாவது: நடப்பு, 2024-25ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை, இணை-யவழியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு மட்டும் நடந்தது. இந்நிலையில் இணைய வழியில் விண்ணப்பிக்க தவறிய மாண-வர்கள் நாளை முதல் நேரடி சேர்க்கை நடக்கிறது. கலை அறி-வியல் கல்லுாரியை நேரில் அணுகி, உரிய சான்றிதழ்களை சமர்ப்-பித்து, முதலாமாண்டு படிப்பில் சேர்ந்து கொள்ளலாம். காலி-யாக உள்ள பாடப்பிரிவுகள்: பி.ஏ.,ஆங்கிலம், பொருளியல், பி.காம்., பி.எஸ்.சி., இயற்பியல், வேதியியல், கணினி அறி-வியல், தாவரவியல், காட்சி தொடர்பியல், பி.சி.ஏ., பி.பி.ஏ., பிரி-வுகளில் காலியிடம் உள்ளது. விரும்பும் பாடப்பிரிவில் மாண-வர்கள் சேர்ந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ