ஈரோடு: தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருது பெற, ஈரோடு மாவட்டத்தில் விண்ணப்பித்த ஆசிரியை, ஆசிரியர்களில், 34 பேரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை-யினர் தெரிவித்தனர்.முன்னாள் ஜனாதிபதி மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த-நாளான செப்.,5ல், தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று சிறப்பாக பணியாற்றிய ஆசிரியை, ஆசிரியர்-களை பாராட்டி மத்திய அரசின் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், தமிழக அரசின் சார்பில் மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுவர்.நடப்பாண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு, ஈரோடு மாவட்-டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஐந்து ஆசிரியர்களும், உயர்நிலை, மேல்நி-லைப்பள்ளிகளில் ஐந்து ஆசிரியர்களும், மெட்ரிக் பள்ளியில் ஒரு ஆசிரியரும் என மொத்தம், 11 பேருக்கு விருது வழங்கப்பட உள்-ளதாக அறிவிக்கப்பட்டது. மாநில நல்லாசிரியர் விருது பெற விரும்பும் ஆசிரியை, ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. மாநில நல்லாசிரியர் விருது பெற ஈரோடு மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள், 51 பேர் விண்ணப்பித்திருந்தனர். 34 பேரின் விண்ணப்பங்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்டிருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 17 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. 34 பேரின் விண்ணப்பங்கள் மீது மாவட்ட குழுக்கள் ஆய்வு செய்து, தமிழக பள்ளிகல்வி துறையின் இயக்குனரகத்தின் நல்லா-சிரியர் விருதுக்கான தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். அக்குழு மூலம், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் தகுதிகள் மீண்டும் ஆராயப்பட்டு விருது பெற உறுதி செய்து, செப்.,5ல் சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் முன்னிலையில் மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.