உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விசாரணைக்கு வராமல் தலைமறைவு இரு ஆண்டுக்கு பின் வாலிபர் கைது

விசாரணைக்கு வராமல் தலைமறைவு இரு ஆண்டுக்கு பின் வாலிபர் கைது

ஈரோடு: ஈரோட்டில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், இரு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.ஈரோடு, கருங்கல்பாளையம் கே.என்.கே.சாலையை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் முனியப்பன், 34. இவர் மீது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால், ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் ஒரு முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த, 2019ல் அடிதடி வழக்கில் சிறை சென்று, ஜாமினில் வெளியே வந்த முனியப்பன், கடந்த இரு ஆண்டாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். ஈரோடு முதலாம் எண் குற்றவியல் நீதிமன்றம், முனியப்பனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது.ஈரோடு டவுன் டி.எஸ்.பி., ஜெய்சிங் தலைமையிலான தனிப்படையினர், காரைக்குடியில் பதுங்கி இருந்த முனியப்பனை கைது செய்து, ஈரோடு முதலாம் எண் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ