உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு மருத்துவமனையில் ரகளை செய்தவர் கைது

அரசு மருத்துவமனையில் ரகளை செய்தவர் கைது

காங்கேயம், வெள்ளகோவில் அழகாபுரி நகரை சேர்ந்தவர் முகமது அமிர்தீன், 23; வெட்டு காயங்களுடன், வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார்.முதலுதவி செய்த பிறகு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு டாக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதை ஏற்காமல், மருத்துவர், ஊழியர்களை தகாத வார்த்தை பேசி தாக்க முயன்றுள்ளார்.இதுகுறித்த புகாரின்படி விசாரித்த வெள்ளகோவில் போலீசார், முகமது அமிர்தீனை கைது செய்தனர். காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை