உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவி மாயம் போலீசில் புகார்

மாணவி மாயம் போலீசில் புகார்

ஈரோடு, ஈரோடு, நஞ்சப்பா நகர் தேவர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன். சமையல் வேலை செய்கிறார். இவரது, 16 வயது மகள் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். கடந்த, 13 காலை பள்ளிக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பியவர், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பள்ளியில் விசாரித்த போது பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. தோழிகள், உறவினர் வீடுகளிலும் பெற்றோர் விசாரித்தனர். தகவல் இல்லாததால் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.டிரைவர் மாயம்ஈரோடு, உழவன் நகர் சூரம்பட்டி இ.வி.என் சாலையை சேர்ந்தவர் ஜெயராஜ், 55, டிரைவர். கடந்த 9 காலை 9:00 மணிக்கு வேலைக்கு கோவை செல்வதாக கூறி சென்றார். இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் தகவல் இல்லை. காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் என, ஜெயராஜ் மனைவி டெய்சி ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ