உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பூத்துக்கு தேவையான 64 பொருள் அனுப்பும் பணி தொடங்கியது

பூத்துக்கு தேவையான 64 பொருள் அனுப்பும் பணி தொடங்கியது

ஈரோடு;ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதியில், 2,222 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 19ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தேவையான வாக்காளர் பட்டியல், டம்மி பேலட் ஷீட், ஓட்டுப்பதிவுக்கான தடுப்பு அட்டைகள், ஸ்டாம்ப் பேட், தீப்பெட்டி, தேர்வு எழுதும் அட்டை, பிளேடு, கயிறு, பசை, நுால், சீல் வைக்க தேவையான பொருட்கள், பென்சில், இரும்பு ஸ்கேல், கார்பன் தாள், பின், ரப்பர்கள், கவர், பேக்கிங் செய்ய தேவையான பொருட்கள் என, 64 வகை பொருட்களை பெட்டி, பைகளில் போட்டு, ஒரே சாக்கில் கட்டி தயார் நிலையில் வைத்துள்ளனர். தொகுதி வாரியாக அவற்றை அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. கன்டெய்னர் லாரிகளில் ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். ௧8ம் தேதி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட் ஆகியவையுடன் இதுவும் சேர்த்து அனுப்பி வைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ