ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பி.டி.ஓ.,க்கள்) இடமாற்றம் செய்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.லோக்சபா தேர்தல் முடிந்த பின் மாவட்ட அளவிலான அதிகாரிகள், தாசில்தார், துணை தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட அளவில், 14 பி.டி.ஓ.,க்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதன்படி சென்னிமலை (கிராம ஊராட்சிகள்) பி.டி.ஓ., ஜெ.பாஸ்கர்பாபு - சென்னிமலை (வட்டார ஊராட்சி) யாகவும், சென்னிமலை கே.கல்பனா (பி.டி.ஓ., வ.ஊ) - கொடுமுடி (பி.டி.ஓ., கி.ஊ), கொடுமுடி குகநாதன் (பி.டி.ஓ., கி.ஊ) - தாளவாடி (பி.டி.ஓ., வ.ஊ), தாளவாடி கே.மனோகரன் (பி.டி.ஓ., வ.ஊ) - ஈரோடு (பி.டி.ஓ., கி.ஊ), ஈரோடு வி.சரஸ்வதி (பி.டி.ஓ., கி.ஊ) - நம்பியூர் (பி.டி.ஓ., கி.ஊ), தாளவாடி பாலமுருகன் (பி.டி.ஓ., கி.ஊ) - சென்னிமலை (பி.டி.ஓ., கி.ஊ), பவானி அர்த்தனாரீஸ்வரன் (பி.டி.ஓ., வ.ஊ) - தாளவாடி (பி.டி.ஓ., கி.ஊ) என மாற்றப்பட்டுள்ளனர்.சத்தியமங்கலம் சரவணன் (பி.டி.ஓ., கி.ஊ) - அந்தியூர் (பி.டி.ஓ., வ.ஊ), அந்தியூர் பிரேம்குமார் (பி.டி.ஓ., வ.ஊ) - கோபி (பி.டி.ஓ., கி.ஊ), கோபி திருநாவுக்கரசு (பி.டி.ஓ., கி.ஊ) - மொடக்குறிச்சி (பி.டி.ஓ., கி.ஊ), மொடக்குறிச்சி சண்முகபிரியா (பி.டி.ஓ., கி.ஊ) - மொடக்குறிச்சி (பி.டி.ஓ., வ.ஊ), மொடக்குறிச்சி பிரேமலதா (பி.டி.ஓ., வ.ஊ) - பெருந்துறை (பி.டி.ஓ., வ.ஊ), பெருந்துறை அப்துல் வஹாப் (பி.டி.ஓ., வ.ஊ) - சத்தியமங்கலம் (பி.டி.ஓ., கி.ஊ), ஈரோடு டி.ஆர்.டி.ஓ., (பி.டி.ஓ., ஹவுசிங்) எம்.லதா - ஈரோடு கண்காணிப்பாளர் (ஆடிட்) என மாற்றப்பட்டுள்ளனர்.