உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 100 சதவீத காய்கறி தொகுப்பு விற்பனை

100 சதவீத காய்கறி தொகுப்பு விற்பனை

ஈரோடு,வீட்டு மொட்டை மாடிகளில் மாடி தோட்டம் அமைத்து, நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்தும் நோக்கில் தோட்டக்கலை துறை சார்பில், 50 சதவீத மானியத்தில் மாடித்தோட்ட தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. நடப்பாண்டு ஈரோடு வட்டாரத்துக்கு, 150 தொகுப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மானிய விலையில், 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நுாறு சதவீதம் விற்பனையாகி விட்டன. மாடித்தோட்ட தொகுப்பு வேண்டுவோர், மானியமின்றி, 900 ரூபாய் விலையில் ஈரோடு யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள, உதவி தோட்டக்கலை அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை