உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எஸ்.ஐ.ஆர்., குறித்த 2ம் கட்ட விசாரணை

எஸ்.ஐ.ஆர்., குறித்த 2ம் கட்ட விசாரணை

ஈரோடு: தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில், 19 லட்-சத்து, 97,189 வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் வினி-யோகித்து, பூர்த்தி செய்து பெறப்பட்டது. கடந்த, 19ல் வெளி-யான வரைவு வாக்காளர் பட்டியலில், 16 லட்சத்து, 71,760 பேர் இடம் பெற்றுள்ளனர். இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என, 3 லட்-சத்து, 25,429 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 44,353 பேருக்கு, 2002ல் உள்ள வாக்காளர் பட்டியல்படி உறவினர் தொடர்பு ஒத்துப் போக-வில்லை. அவர்களிடம் ஆவணங்களை பெற்று இணைக்கும் பணி, புதிய வாக்காளர் சேர்ப்பு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இரண்டாவது கட்ட விசாரணை நேற்று நடந்தது. இதில் கூடுதலாக நியமிக்கப்-பட்ட, 167 உதவி வாக்காளர் பதிவு அலுவலர் உட்பட பலர் பங்-கேற்றனர். கடந்த, 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகாத வாக்காளர் இனங்களில் உள்ள, 46,400 நபர்களிடம் விசாரிக்கும் பொருட்டு, எட்டு வாக்காளர் பதிவு அலுவலர், 167 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நோட்டீஸ் வழங்குவது, விசாரணை அறிவிப்பை இணைய தளத்தில் உள்ளீடு செய்வது, விசாரணை அறிவிப்பு வழங்கும் முறை, தினமும் மேற்கொள்ளும் விசாரணை நாள், நேர விபரம் பற்றி விளக்கப்பட்டது.அதன்படி ஒத்துப்போகாத வாக்காளர்களை உள்ளீடு செய்வது குறித்து செயல் விளக்கம் காட்டப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்த-குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை