உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரி வரும் சுற்றுலா பயணிகளால் ஒரே ஆண்டில் ரூ.49 லட்சம் வருவாய்

கொடிவேரி வரும் சுற்றுலா பயணிகளால் ஒரே ஆண்டில் ரூ.49 லட்சம் வருவாய்

கோபி: சுற்றுலா பயணிகள் வருகையால் கடந்த ஒரே ஆண்டில், கொடிவேரி தடுப்பணை மூலம், 49.47 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கின்றனர். அரசு விடுமுறை நாட்கள், பொங்கல், கரிநாள், தமிழ் புத்தாண்டு, ஆடி-18, தீபாவளி உள்ளிட்ட நாட்களில் பயணிகள் குவிகின்றனர். கடந்த, 2014 நவம்பர் முதல், அணை வளாகத்துக்குள் நுழைய சுற்றுலா பயணிகள் ஒருவருக்கு ஐந்து ரூபாய், நுழைவு கட்டணமாக நீர்வள ஆதாரத்துறை சார்பில் வசூலிக்கப்படுகிறது. கொடிவேரி தடுப்பணை மூலம், ஆண்டுதோறும் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. கடந்த, 2023 ஜனவரியில், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் விடுமுறை என்பதால் அந்த ஒரு மாதத்தில் மட்டும், 77 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு வந்துள்ளனர். இதையடுத்து, கல்வி நிறுவனங்களின் கோடை விடுமுறையால் ஏப்ரலில், 1.23 லட்சம் பேரும், மே மாதத்தில், 1.78 லட்சம் பேரும் வருகை புரிந்துள்ளனர். ஜூனில், 96 ஆயிரம் பேர் வருகை புரிந்துள்ளனர். 2023ல், 12 மாதங்களில் கொடிவேரி தடுப்பணைக்கு மொத்தம், 8.65 லட்சம் பேர் வருகை புரிந்ததால், 49.47 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. அந்த தொகை அனைத்தும், நீர்வள ஆதாரத்துறையின் வருவாய் பிரிவு கணக்கின் மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை