உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மெடிக்கல் ரெப்பை கடத்தி நகை பறித்த 7 பேர் கைது

மெடிக்கல் ரெப்பை கடத்தி நகை பறித்த 7 பேர் கைது

புன்செய்புளியம்பட்டி: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த கண்ணார்-பாளையத்தை சேர்ந்தவர் மாடசாமி, 35; மெடிக்கல் ரெப்பாக பணிபுரிகிறார். கடந்த, 10ம் தேதி இரவு ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்-பட்டி வி.ஆர்.டி.நகர் அருகே டூவீலரில் அமர்ந்து கொண்டு மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது குடிபோ-தையில் வந்த இருவர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் தங்கள் நண்பர்களை அழைக்கவே, ஆம்னி காரில் ஐந்து பேர் வந்தனர். மாடசாமியை ஆம்னி காரில் ஏற்றி, கைகளை கட்டிப்போட்டனர். அவர் போட்டிருந்த ஒரு பவுன் சங்-கிலி, அரைப்பவுன் மோதிரம் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல்-போனை பறித்தனர். அதேசமயம் அவரது டூவீலரை, கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் எடுத்துக்கொண்டு ஆம்னி காரை பின் தொடர்ந்தார்.மாடசாமி அடித்து உதைத்த கும்பல், 10 கி.மீ., தொலைவில் உள்ள புங்கம்பள்ளி அருகே அவரை இறக்கி விட்டு சென்றனர். இதுகுறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், மாட-சாமி புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார், கடத்தல் கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் புன்செய்புளியம்பட்டி, இந்திரா நகரை சேர்ந்த பிரகாஷ், 40, என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் தந்த தகவ-லின்படி பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த பவா-னந்தம், திருப்பூர் மாவட்டம் அவினாசி கார்த்திகேயன், தீபக்-குமார், கோவையை சேர்ந்த ஸ்ரீபால், வெங்கநாயக்கன்பாளை-யத்தை சேர்ந்த தன்ராஜ், புளியம்பட்டியை சேர்ந்த நீலாகுமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மாடசாமி-யிடம் பறித்த தங்கநகை, மொபைல்போன், டூவீலரை பறிமுதல் செய்தனர். ஏழு பேரையும் சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்-றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சத்தி கிளை சிறையில் அடைத்-தனர். கைதான ஸ்ரீபால் மீது கொலை வழக்கு, பவானந்தம் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை