உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பள்ளியில் தீ விபத்து 3 கம்ப்யூட்டர் எரிந்தது

அரசு பள்ளியில் தீ விபத்து 3 கம்ப்யூட்டர் எரிந்தது

ஈரோடு:ஈரோடு, இடையன்காட்டு வலசில், மாநகராட்சி உயர்நிலை பள்ளியில், கம்ப்யூட்டர் லேப் உள்ளது. நேற்று முன் தினம் மாலை வழக்கம்போல் தலைமை ஆசிரியர் கதவை பூட்டி சென்றார்.நேற்று காலை வந்து பார்த்தபோது லேப்பில் இருந்து கருகிய வாசனை அடித்தது. ஆசிரியர்கள் சென்று பார்த்த போது லேப்பில் இருந்த மூன்று கம்ப்யூட்டர்கள் முற்றிலும் எரிந்து நாசமானது தெரிந்தது. அறை முழுவதும் தீக்கிரையாகி காணப்பட்டது. எரிந்து சாம்பலான கம்ப்யூட்டர்களின் மதிப்பு, 75 ஆயிரம் ரூபாய் இருக்கும். மின் கசிவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி