உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொதுத்தேர்வு ஏற்பாடு குறித்து ஆலோசனை

பொதுத்தேர்வு ஏற்பாடு குறித்து ஆலோசனை

ஈரோடு:பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு பொதுத்தேர்வுகள் குறித்து, முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், பிற துறை சார்ந்த அலுவலர்களுக்கான கலந்தாலோசனை கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு பாடநுால் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி தலைமை வகித்தார்.வினாத்தாளகள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்துக்கு சென்றடைய வேண்டும். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சரியாக செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் பதற்றமின்றி தேர்வு எழுத வழிவகை செய்ய வேண்டும்.அனைத்து அலுவலர்களும் தேர்வு துறை வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்றவும் யோசனை தெரிவிக்கப்பட்டது. கோபி, அந்தியூர், ஈரோட்டில் அரசு பள்ளிகளில், கஜலட்சுமி ஆய்வு செய்தார். அவருடன் முதன்மை கல்வி அலுவலர் சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை