உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அண்ணாதுரை நினைவு தினம் அனுசரிப்பு கோவில்களில் நடந்த சமபந்தி விருந்து

அண்ணாதுரை நினைவு தினம் அனுசரிப்பு கோவில்களில் நடந்த சமபந்தி விருந்து

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், மாநகர செயலாளர் சுப்பிரமணியம் முன்னிலையில், மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி., கந்தசாமி, மாநில நிர்வாகிகள் பிரகாஷ், சந்திரகுமார், வீரமணி, மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், திருவாசகம், துணை மேயர் செல்வராஜ், குமாரசாமி, பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர். ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, சிவசுப்பிரமணி, பகுதி செயலாளர் மனோகரன், மல்லிகா உட்பட பலர் மரியாதை செலுத்தினர்.* அந்தியூரில் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் தலைமையில், அண்ணாதுரை உருவப்படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், தி.மு.க., சார்பில், சமபந்தி விருந்து நடந்தது. * பவானி சங்கமேஸ்வரர் கோவில், செல்லியாண்டியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது. இதில் பவானி தி.மு.க., நகர செயலாளர் நாகராசன், கவுன்சிலர்கள் சுப்பிரமணியம், சந்தோஷ்குமார், வி.சி., சமூக ஊடகப்பிரிவு மாநில துணை செயலாளர் பூபதி ராஜராஜசோழன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் அ.தி.மு.க.. சார்பில், நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில், அண்ணாதுரை போட்டோவுக்கு, அவைத்தலைவர் பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஆர்., இளைஞரணி இணை அமைப்பாளர் மாதையன், கவுன்சிலர் பவித்ரா உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.* கோபி எம்.எல்.ஏ., அலுவலகத்தில், எம்.எல்.ஏ., செங்கோட்டையன், அண்ணாதுரை போட்டோவுக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், முன்னாள் எம்.பி., சத்தியபாமா, ஒன்றிய செயலாளர் குறிஞ்சி நாதன், முன்னாள் நகர செயலாளர் கந்தவேல் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். பாரியூர் கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது.* டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்று, டி.என்.பாளையத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் நல்லசிவம், டி.என் பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை