உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு /  150 சவரன் நகை திருடப்பட்ட வீட்டில் மீண்டும் திருட்டு

 150 சவரன் நகை திருடப்பட்ட வீட்டில் மீண்டும் திருட்டு

வீரப்பன்சத்திரம்:ஈரோட்டில், 150 சவரன் நகை திருடு போன வீட்டில், 40 சவரன் நகை, ஏழு லட்சம் ரூபாய் மீண்டும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கணபதி நகர், நான்காவது வீதியில் ஓய்வுபெற்ற பேராசிரியை சுப்புலட்சுமி, 69, தனியாக வசிக்கிறார். கணவர் துரைசாமி இறந்து விட்டார். தம்பதியின் ஒரே மகள் வெளிநாட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல சாப்பிட்டு விட்டு, தரைத்தளத்தில் தனி அறையில் சுப்புலட்சுமி துாங்கிவிட்டார். காலை எழுந்தபோது வீட்டின் சில அறைகள், பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில், வீட்டின் மாடி கதவை உடைத்து, முகமூடி அணிந்த நபர்கள் உள்ளே புகுந்து, 40 சவரன் நகை, ஏழு லட்சம் ரூபாயை திருடியது தெரிந்தது. வீட்டில் இருந்த, கண்காணிப்பு கேமராவில் முகமூடி, கையுறை அணிந்த நபர்களின் நடமாட்டம் இருந்தது. கடந்த, 2023ல் இதே வீட்டில், 150 சவரன் தங்க நகை திருடு போனது. இதில் ஆந்திராவை சேர்ந்த அனில்குமார் என்பவரை வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்த நிலையில், மீண்டும் அதே வீட்டில் நகை, பணம் திருட்டு நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை