உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுடுகாடு இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் அந்தியூர் மக்கள்

சுடுகாடு இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து செல்லும் அந்தியூர் மக்கள்

அந்தியூர்: அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் பஞ்., மந்தையில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ளவர்கள் இறந்தால், ௧ கி.மீ., துாரத்தில் உள்ள சுடுகாட்டுக்கு செல்ல வேண்டும். அதற்கும் ஓடை வழியாக செல்ல வேண்டும். ஓடையில் தண்ணீர் இல்லாதபோது சிரமமின்றி சென்று விடலாம். ஆனால், வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் போது, ஓடை நிரம்பி தண்ணீர் செல்லும். அப்போது சடலத்தை சுமந்து செல்வது கடும் சவாலாக இருக்கும். நேற்று முன்தினம் இப்பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். உடலை தகனம் செய்ய சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். தற்போது ஓடையில் இடுப்பளவு தண்ணீர் செல்கிறது. அதை கடந்து சடலத்துடன் சென்றனர். இதுகுறித்து மக்கள் கூறியதாவது: எங்கள் பகுதி மக்களுக்கு மயானம் இருந்தால், இந்நிலை ஏற்படாது. எனவே எங்களுக்கு மயான வசதியை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து பல துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை